#Breaking : இந்தியர்களுக்கு விசா வழங்கும் சேவையை நிறுத்திய ரஷ்யா…!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.
கடந்த ஒரு அஆண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலகையே ஆட்டி படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகின்ற்னர்.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 4 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்போர் எண்ணிக்கையும், ஆயித்தை கடந்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகத்தில், விசா வழங்கும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025