நாடாளுமன்றத்தை கலைத்தார் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கனடாவில் அடுத்த மாதம் 21 -ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.இதனால் கனடாவின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அந்த நாட்டு கவர்னர் ஜெனரலான ஜூலி பயட்டே (Julie Payette) -வை நேரில் சந்தித்து நாடாளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரை செய்தார்.
இதற்கு பின்னர் கவர்னர் ஜெனரல் ஜூலி பயட்டே (Julie Payette) நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!
June 26, 2025