நடிகர் விஷாலின் ”சக்ரா” வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை…

Published by
Kaliraj

நடிகர் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ என்ற திரைப்படம் விரைவில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில்,  இந்த திரைப்படத்துக்கு தடை கேட்டு டிரைடெண்ட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்திரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,இந்த படத்தை தியேட்டரில் வெளியிடும் போது ரூ.20 கோடிக்கு குறைவாக வசூலானால், விஷால் சுமார் ரூ.8½ கோடி திருப்பித்தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த திரைப்படம், ரூ.20 கோடிக்கு மேல் வசூல் ஆகாததால், தயாரிப்பாளருக்கு, விஷால் தர வேண்டிய பணத்தை தரவில்லை. இதன்பின்னர், ஆனந்தன் என்ற இயக்குனர் மனுதாரர் ரவீந்திரனிடம் ஒரு கதையை சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தம் செய்தார்.
ஆனால், அதே கதையை வைத்து சக்ரா என்ற பெயரில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் எடுத்துள்ளார். இயக்குனர் ஆனந்தன் மனுதாரரிடம் கூறிய கதையும், இந்த படத்தின் கதையும் ஒன்று” என்று கூறி, படத்தின் ‘டிரெய்லர்’ காட்சியை ‘பென்டிரைவ்’ மூலம் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கு ஆவணங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட ‘பென்டிரைவை’ தன் கம்ப்யூட்டரில் போட்டு படத்தின் டிரெய்லர் காட்சியை பார்த்தார். அதன்பின்னர், சக்ரா படத்தை ஓ.டி.டி. இணையதளம் வாயிலாக வெளியிடும் நடவடிக்கையை வருகிற 30-ந்தேதி வரை மேற்கொள்ளக்கூடாது. தற்போதையை நிலையே தொடரவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Published by
Kaliraj

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago