வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் “சக்ரா” எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படம் சென்னையில் மட்டும் 98 லட்சங்களும் மொத்தமாக தமிழகத்தில் 5.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை மேலும் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், மனோபாலன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறந்த கதையாக உருவாகியுள்ள இந்த படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து வெளியான 3 நாட்களில் சென்னையில் மட்டும் 98 லட்சங்களும் மொத்தமாக தமிழகத்தில் 5.96 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நாளுக்கு நாள் இந்த திரைப்படம் வசூலும் உயர்ந்து வருவதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025