மாஸ்டர் படத்தில் குறைவான நேரம் மட்டுமே நடித்துள்ளதாக கிண்டலடித்த ரசிகர்களுக்கு சாந்தனு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்கு வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, இந்த படத்தில் நடிகர் சாந்தனு, விஜய் டிவியின் பிரபலம் தீனா படத்தில் ஒரு சிறிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பு குறித்து அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடும் பொழுது பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
ரசிகர் ஒருவர் மாஸ்டர் படத்தில் பூனை அளவுக்கு கூட உங்களது காட்சி இல்லை ஊறுகாய் மாதிரி கூட பயன்படுத்தப்படாத நீங்கள் ஏன் இவ்வளவு பில்டப் போடுகிறீர்கள் என சாந்தனுவை பார்த்து கிண்டல் செய்து ஒரு கமெண்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த சாந்தனு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில், ஒரு காட்சியோ ஒரு படமோ அதுவே ஒரு சாதனைதான் என்று பதில் கொடுத்துள்ளார். அதேபோலதான் விஜய் டிவி தீனாவை பார்த்து ரசிகர் ஒருவர் 9 செகண்ட் கூட படத்தில் கட்டப்படவில்லை. அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என கேட்டதற்கு அந்த ஒன்பது செக்கென்ட படத்தில் வர நான் ஒன்பது வருடங்கள் உழைத்து இருக்கிறேன் என பதிலளித்திருந்தார். உழைத்து முன்னேறும் அவர்களை பார்த்து கிண்டல் அடிப்பதை நிறுத்திவிட்டு நமது வாழ்க்கையில் உயர்வதற்கு முயல்வதே நல்ல மனிதனுக்கு அழகு.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…