தல 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்..!!

தல 61 படத்தை குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை இயக்கப் போவதும் ஹெச்.வினோத் என்பது உறுதியாகிவிட்டது. ‘வலிமை’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே அடுத்த படத்துக்கான ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அஜித் . மேலும் தல 61 படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025