சீனவின் அராஜக ஆதிக்கத்தை தடுக்க இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டின் வெளியுறவு கொள்கைக்கான செனட் கமிட்டி கூட்டம் நடந்தது.
இதில், கிழக்கு ஆசிய மற்றம் பசிபிக் பகுதிகளுக்கான வெளியுறவு துணை அமைச்சர், டேவிட் ஸ்டில்வெல் கூறியதாவது, இந்தோ – பசிபிக் பகுதி மிகவும் பதற்றமாகவே உள்ளது. இதில் இந்திய பெருங்கடல், மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதிகள், தென் சீன கடல் உட்பட பல கடற்பகுதிகள் இடம் பெற்றுள்ளன.தென் சீன கடல் பகுதியில், தைவான், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம் நாடுகளுக்கும் பங்கு உள்ளது. ஆனால், இந்த கடல் பகுதி தனக்கு சொந்தம் என்று சீன கூறி வருகிறது. இந்த விவகாரத்தில், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த, 2017ல், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் இணைந்து, ‘குவாட்’ கூட்டணியை உருவாக்கினர். இந்தோ – பசிபிக் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், இந்தோ – பசிபிக் பகுதியில் கடல் வழிகளில் யாரும் ஆதிக்கம் செலுத்தவதை தடுக்கவும், இந்த கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.சீன ஆதிக்கத்தை தடுக்க, இந்தோ – பசிபிக் நாடுகளுக்கு, ராணுவ உதவி உட்பட பல உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது என்று அவர் கூறினார்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…