சீனாவுக்குச் சொந்தமான பிரபல செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவும் தடை விதிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.இதனால், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட், பைட்டான்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், பேச்சு வார்த்தையை 45 நாள்களுக்குள் நடத்தி முடிக்கவேண்டும். அதாவது செப்டம்பர் 15-க்குள் இல்லையென்றால் அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீன அரசு நாளிதழான சீனா டெய்லியில், டிக்டாக்கை திருடும் அமெரிக்காவின் முயற்சியை சீனா ஏற்றுக் கொள்ளாது எனவும் சீன நிறுவனங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதில் சொல்ல சீனாவிடம் ஏராளமான வழிகள் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…