எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை காலை வருகிறது “கோப்ரா” டீஸர்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீஸர் நாளை காலை 10.32 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம், “கோப்ரா”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. இந்த படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் டீஸர் குறித்த எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே எழுந்தது.
அந்தவகையில், இந்த படத்தில் டீஸர் நாளை காலை 10:32 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் படப்பிடிப்பு தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
Set your alarms for 10:32AM tomorrow! ????
THE THRILLING #CobraTeaser awaits you! ????????#Cobra#ChiyaanVikram @AjayGnanamuthu @Lalit_SevenScr @arrahman @7screenstudio @IrfanPathan @SrinidhiShetty7 @harish_dop pic.twitter.com/lZfOkRMGNF
— Sony Music South (@SonyMusicSouth) January 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025