அமெரிக்காவை அதிர வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

அமெரிக்காவை அதிர வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை. 86 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில் 4,526,850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 303,405 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொரோனா வைராஸால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்க தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,457,593 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86,912 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், நேற்று மட்டும் அமெரிக்காவில், 1,715 பேர் உயிரிழந்துள்ளனர்.