அமெரிக்காவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – அதிபர் ட்ரம்ப்

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து, இந்த நோய் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவில், 24 மணிநேரத்தில், 20,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு, தற்போது இதன் பாதிப்பு தளர்ந்து வருவதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு, ஊரடங்கை தளர்த்துவது குறித்து ட்ரம்ப் இன்று அறிவிக்கவுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அதிபர் ட்ரம்ப் 6 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.