ரிலீசிற்கு ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ள சூப்பர் ஸ்டாரின் தர்பார்!

- சூப்பர் ஸ்டார் நடித்து வரும் தர்பார் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
- இப்படம் அமெரிக்காவில் ஜனவரி எட்டாம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக்கியுள்ளது.
இப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜனவரி 8ஆம் தேதி இப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025