கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணியை நாடுகள் முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரசும் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பரவி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் வகைகளிலே டெல்டா வகை கொரோனாவுக்கு அதிக அளவு பரவும் தன்மை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த டெல்டா வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளது. இது கொரோனா வகைகளில் மிக விரைவாக பரவக்கூடியது.
தற்போது பல நாடுகளில் கொரோனா குறைந்து வருவதன் காரணத்தால் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். ஆனால், இந்த வகை கொரோனா வேகமாக பரவி பல எண்ணிக்கை அளவு தொற்று எண்ணிக்கையை அதிகரித்து விடும். அதனால் மக்கள் வெளியே கூட்டமாக கூடுவதை தவிர்த்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா போன்ற தீநுண்மி தனது இடத்தை தக்கவைக்க உருமாறி மீண்டும் ஏற்படும். புதிது புதிதாக கொரோனா வகைகள் தோன்றும் என்று உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழிநுட்ப பிரிவின் தலைவர், மரியா வேன் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…