திரையுலகில் புதிய கர்ணனாக அவதரித்த தனுஷ்.!

- நடிகர் தனுஷ், பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
- படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.
நடிகர் தனுஷ் தற்போது நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது. பேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் , படத்தின் பெயர் வெளியாகவில்லை, ஆனால் கோடை விடுமுறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
#கர்ணன் #Karnan –
அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர்!
தொடர் படப்பிடிப்பில்..@dhanushkraja @mari_selvaraj @thevcreations #D41 pic.twitter.com/sTlhUTtMif— Kalaippuli S Thanu (@theVcreations) January 5, 2020
அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்தையும் வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் எஸ் தாணு, அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர். தொடர் படப்பிடிப்பில் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025