தனுஷிற்கு ஜோடியாகும் “பீஸ்ட்” கதாநாயகி..?

வெங்கி அட்லூரி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் தனுஷ் தற்போது தி க்ரே மேன், மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43- வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட்இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், இயக்குனர் வெங்கி அட்லூரி மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025