டிக்கிலோனா திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சந்தானம். ஆரம்ப காலகட்டத்தில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில், தற்போது சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…