2015-ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் குறித்து விவாதித்ததா சீனா…?

2015-ஆம் ஆண்டில் சீன ராணுவ விஞ்ஞானிகளும், அந்நாட்டு சுகாதார துறையினரும் கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்தும் முறை பற்றி விவாதித்து இருப்பதாக THE AUSTRALIAN என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, சீனாவின் வுகாண் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஆனது, அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவி, தற்போது வரை இந்த வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல நாடுகளில் இந்த வைரஸின் இரண்டாவது, மூன்றாவது அலை கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை தடுப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரையிலும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. இந்நிலையில் 2015-ஆம் ஆண்டில் சீன ராணுவ விஞ்ஞானிகளும், அந்நாட்டு சுகாதார துறையினரும் கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்தும் முறை பற்றி விவாதித்து இருப்பதாக THE AUSTRALIAN என்ற பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆஸ்திரேலிய பத்திரிகையில் மூன்றாவது உலகப்போர் உயிரியல் ஆயுதங்களால் நிகழக்கூடும். இதன் மூலம் எதிரி நாட்டின் மருத்துவத்துறையை செயலிழக்க செய்து விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, Australian Strategic Policy Institute-ன் நிர்வாக இயக்குனர் பீட்டர் ஜென்னிங்ஸ் கூறுகையில், இது முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். ஏனென்றால், கொரோனா வைரஸை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றி சீனா சிந்திப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, சீனா தான் இந்த வைரஸை பரப்பியதாக குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், பல நாடுகளின் சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக, இந்த தகவல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025