இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியாவதற்கு தயாராகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேர்ட்ப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்று பாடல்கள் எண்ணிக்கை குறித்து தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதாவது படத்தில் மொத்தம் 3 பாடல்கள் எனவும், 3 தீம் மியூசிக் எனவும் கூறப்படுகிறது. விரைவில் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதால் இசை மீது மிகவும் எதிர்பார்ப்புஉள்ளது. விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14 – ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…