தனுஷிற்கு ஜோடியாகும் மூன்று ஹீரோயின்கள்..?? யார் யார் தெரியுமா..?

தனுஷ் நடிக்கவுள்ள D44 திரைப்படத்தில் நடிகர் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தனது 44 (D44) வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, D44 திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹன்ஷிகா, நித்தியா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகிய மூன்று பேரும் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகை ஹன்ஷிகா தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025