இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த திரைப்படம்..! ஹீரோ யார் தெரியுமா..??

இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜிவி பிரகாஷ் D44, ருத்ரன், அருண்விஜய் படம், வாடிவாசல், போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025