மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா …..? இந்த யோகாவை செய்தால் போதும்!

Default Image

மன அழுத்தம் என்பது சாதாரணமாக கருதப்படக் கூடிய ஒன்று அல்ல. இது ஒரு தீவிரமான மன நோய். இந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு நாம் யோகாசனம் செய்வது நல்ல தீர்வு கொடுக்கும். மன அழுத்தத்தால் பலர் விரக்தி அடைவது மட்டுமல்லாமல், தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். எனவே மன அழுத்தத்தால் பாதிக்கப் படுபவர்கள் நடராஜாசனம் செய்வது மிகவும் நல்லது. இந்த யோகாசனத்தை எப்படி செய்வது எப்படி, இதன் நன்மைகள் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நடராஜாசனம்

நாட்டியத்தின் இறைவனாகிய நடராஜன் போல இந்த யோகா முறை இருப்பதால் இந்த பெயர் பெற்றுள்ளது. இந்த நடராஜாசனம் செய்வதன் மூலமாக நமது மனம் அமைதி அடைய உதவுவதுடன், சில நாள்பட்ட நோய்களிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.

செய்யும் முறை

நடராஜாசனம் செய்வதற்கு முதலில் தரையில் ஏதேனும் ஒரு விரிப்பு ஒன்றை விரித்துக் கொள்ளவும். அதன் பின்பு சூரியனுக்கு நேராக அமர்ந்து முதலில் சிறிது நேரம் பிராணயாமா மூச்சுப் பயிற்சி செய்யவும். அதன் பின்பாக எழுந்து நின்று கையின் உதவியுடன் வலது காலை பின்புறமாக மேலே தூக்க வேண்டும். பின்பும் உடலின் மொத்த எடையும் ஒற்றை காலில் உள்ள படி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்பதாக மற்றொரு கையை காற்றில் அசைப்பது போல முன்னோக்கி நகர்த்தவும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அந்த நிலையிலே இருக்கவேண்டும். பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். பின் மீண்டும் இடது காலில் இதே போல செய்ய வேண்டும். நடராஜாசனம் செய்வது சாதாரணம் கிடையாது. இருந்தாலும் கடின உழைப்பு மூலம் நமது மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், நமது உடலையும் ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.

நன்மைகள்

தொடர்ச்சியாக நடராஜாசனம் செய்வதன் மூலமாக உடல் எடை அதிகரிப்பை குறைக்கலாம். மேலும், அதிகப்படியான மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies