வலிமை படத்தின் இரண்டு அப்டேட்டுகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வலிமை திரைபடதின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே படமாக வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் அஜித் ரசிகர்களுக்கு வலிமை படத்தின் இரண்டு அப்டேட்டுகள் காத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, அடுத்த மாதம் 16 ஆம் தேதி வலிமை படத்தின் டீசர் மற்றும் மாத இறுதியில் வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…