ஐரோப்பாவில் குதிரை தொழுவத்தின் கீழ் 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்ட விரோதமாக செயல்பட்ட போதை சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிரடியாக சோதனையிட்ட போலீசார் 20 பேரை கைது செய்தனர். இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்டலுசியன் (Andalusian) நகரில் உள்ள தொழுவம் ஒன்றில் சுரங்கம் அமைத்து தடை செய்யப்பட்ட தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாகவும், அது ஒரு மணி நேரத்தில் 3500 சிகரெட்டுகளை தயாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அங்கிருந்து 1,53,000 சிகரெட் பாக்கெட்டுகள், 17,600 கிலோ புகையிலை தூள் மற்றும் 144 கிலோ கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் இதில் கைது செய்யப்பட்ட 20 பேர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான 30 வயதுடைய டேனியல் டூப்ஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அடையாள ஆவணத்தை மோசடி செய்த குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். இதனை சர்வதேச நடவடிக்கை காரணமாக யூரோபோல், மத்திய இயக்க பிரிவின் கீழ் பொருளாதார குற்றக் குழு மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையினரின் பல நிறுவன ஆதரவுடன் கார்டியா சிவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…