நடிகை டிடி நடனமாடும் போது அவரது குடும்பத்தினர் செருப்பை வீசுவது போல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட, நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி இருந்தார். இது ஒரு புறம் இருக்க தனது புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார். அதுவும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் நடனமாடும் போது அவரது குடும்பத்தினர் செருப்பை வீசுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் “விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ரீல் போடணும்ன்னு நெனச்சு, சரி ட்ரெண்டிங்கில் ஒன்று ட்ரை பண்ணேன். எங்க வீட்டு ரியாக்சன் இதுதான், அதை பார்த்து சிரிச்சுட்டு போங்க, செம அடி” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…