போதைப்பொருள் கடத்தல் மன்னனை காணவில்லை.. ஈக்வடாரில் வெடித்த கலவரம்.!

TC Television network Guayaquil Ecuador

ஈக்வடார் நாட்டில் கைது செய்யப்பட்டு குவாயாகில் சிறையில் இருந்த பிரபல போதை பொருள் கடத்தல் தலைவன் அடோல்போ மசியாஸ் கடந்த ஞாயிற்று கிழமை காணாமல் போனார். இதனை தொடர்ந்து அடோல்போ மசியாஸ் இறந்துவிட்டதாக கருதி ஈக்வடார் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ள கைதிகள்  சிறையினுள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த போர்!! ஹிஸ்புல்லாவை எச்சரிக்கும் இஸ்ரேல்! நடந்தது என்ன?

மேலும், ஈக்வடார் நாட்டின் வெளியிலும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இதனால் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். குவாயாகில் (Guayaquil ) உள்ள ஒரு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் புகுந்த கலவரக்காரர்கள் துப்பாக்கி முனையில் பலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தனர். மேலும் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட வீடியோவும் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பள்ளிகளில் ஆசிரியர்களையும், மாணவர்களையும், பல்வேறு இடங்களில் பொதுமக்களை அடோல்போ மசியாஸ் ஆதரவாளர்கள் துப்பாக்கி முனையில் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஈக்வடார் நாட்டின் பிரதமர் டேனியல் நோபோவா நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் , நாட்டின் பாதுகாப்புப்படை, ஆயுதப்படையை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளார்.

திங்களன்று அந்நாட்டு பிரதமர் நோபோவா கூறுகையில், நீங்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்தீர்கள். நாங்கள் அதனை கொண்டு உங்களுக்கு பதிலடி தருவோம். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். அனைத்து ஈக்வடார் மக்களுக்கும் அமைதி திரும்பும் வரை நாங்கள ஓய்வெடுக்க மாட்டோம் என நோபோவா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam