ரஷீத்கான் வீசிய 18 பந்தில் 56 ரன்கள் குவித்த இங்கிலாந்து !

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடியது.இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சூழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஓவரில் மட்டுமே அதிக ரன்களை இங்கிலாந்து வீரர்கள் அடித்து குவித்தனர்.
ரஷீத் கான் நேற்றைய போட்டியில் 9 ஓவர்கள் வீசினார்.அதில் முதல் 6 ஓவரில் 54 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.பின்னர் வீசிய 7-75 ,8-96 ,9-110 ரன்கள் கொடுத்தார்.இதன் மூலம் 3 ஓவரில் 56 ரன்கள் கொடுத்து உள்ளார். 9 ஓவரில் 11 சிக்ஸர் ,3 பவுண்டரி கொடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025