கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இப்படத்தில் மதுபாலா என்பவர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படமும் எதிர்பார்த்த அளவிற்கு இருந்ததால் படம் மாபெரும் வெற்றியடைந்தது.
படத்தின் முதல் படம் வெற்றியடைந்ததால் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் காத்திருந்தார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஜென்டில்மேன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜென்டில் மேன் 2 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அறிவிப்பில் ஜென்டில்மேன் 2 படம் உருவாகவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபட்டிருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமானது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்கரவர்த்தி அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தை யார் இயக்கப்போகிறார், யார் ஹீரோவாக நடிக்கபோகிறார் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…