வலிமை திரைப்படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த போனி கபூர்..!!

வலிமை திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு குடும்ப திரைப்படம் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் வலிமை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், அதிரடி சண்டைக்காட்சி ஒன்று வருகின்ற ஏப்ரல் மாதம் 10 நாட்கள் மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தை குறித்து படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது ” வலிமை திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த ஒரு குடும்ப திரைப்படம். கண்டிப்பாக தமிழ் சினிமாவின் ஒரு புதிய கதையாக இருக்கும். அஜித் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் நிச்சியமாக பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். ஜான்வி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு, வி.ஜே பானி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்திற்கு.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025