வேலையிழந்தவர்களுக்கு எனது உணவகத்தில் உணவு இலவசம் – பாகிஸ்தான் அம்பயர்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவியுள்ள நிலையில், பாகிஸ்தானிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து இதனால் அங்கும் 144 தடை உத்தரவு போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலர் வேலை வாய்ப்பின்றி உணவின்றி தவிக்கும் நிலை ஏற்படும். எனவே தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அம்பயர் அலீம் டார் அவர்கள் டார்ஸ் டெலைட் டோ என்ற பெயரில் லாகூரில் உள்ள சாலையில் இயங்கி வரும் ரெஸ்டாரண்ட் ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில் நம்முடைய ஆதரவில்லாமல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய இயலாது. தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் பரவ தொடங்கியுள்ளது. அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனால் வேலை இல்லாமல், உணவில்லாமல் இருப்பவர்கள் என்னுடைய ரெஸ்டாரண்டில் பணம் ஏதும் இன்றி இலவசமாக சாப்பிடலாம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025