சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக நடித்திருக்கும் அவர், கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, லொஸ்லியா மீது காதல் வாய்ப்பட்ட நிலையில், இவர்கள் இருவரின் காதலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின் இருவரும் தனித்தனியாக தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் காதல் என்று நான் நினைத்த விஷயங்கள் அனைத்தும் தற்போது நான் காதல் என்று நினைக்கும் விஷயங்களிலிருந்து வேறுபட்டவை. அப்போது, ஒரு அழகான திருச்சி பெண்ணுடன் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், எதிர்பார்ப்பு இல்லாமல் பழகும் உறவுதான் நட்பு என்று நாம் வரையறுப்போம். அதையே நான் காதலிலும் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை ஏற்றுக்கொள்ள முடிந்தால், அவரிடமிருந்து எதையும் எதிர்பாக்காமல் இருந்தால் காதல் வளர்ச்சியடையும் என்று கூறியுள்ளார்.
நான் முதலில் பெண்களிடத்தில் கண்களைத்தான் பார்ப்பேன். எளிமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கும் பெண்களை நான் விரும்புவேன். உண்மையில் எனக்குத் திருமணம் பற்றித் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…