கொரோனா பரவல் காரணமாக கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் தள்ளிவைப்பு!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறக்கூடிய இந்த விழாவில் இசைத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போல இந்த ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதி கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி ஜனவரி மாதம் நடைபெறவிருந்த இந்த கிராமிய நிகழ்ச்சி மார்ச் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025