கோழி முட்டையை கொண்டு ‘கின்னஸ்’ சாதனை.! அசத்தும் 20 வயது இளைஞன்.!

கோழி முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி 20 வயதான முகமது முக்பெல் என்கிற இளைஞன் சாதனை செய்துள்ளார்.
மலேசியா, கோலாலம்பூரில் வசித்து வருகிறார் 20 வயதான எமனை சேர்ந்த முகமது முக்பெல். இவர் புதியதாக கோழி முட்டையை கொண்டு ஒரு கின்னஸ் சாதனையை செய்துள்ளார்.
இந்த கோழி முட்டைகளை கொண்டு, அதனை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதனை உயரமான அடுக்காக கட்டியெழுப்பியுள்ளார். இந்த முட்டை அடுக்கு குறைந்தது ஐந்து வினாடிகள் கிழே விழாமல் இருக்கவேண்டும்.
மேலும், கின்னஸ் விதிகளின்படி, முட்டைகளானது புதிய கோழிகளின் முட்டைகளாக இருக்க வேண்டும். மேலும், முட்டைகளை அடுக்கி வைக்க பிசின், பசை போன்ற கூடுதல் பொருட்கள் பயன்படுத்தகூடாது.
இந்த விதிகளுக்கு உட்பட்டு அந்த 20 வயது இளைஞன், முட்டைகளின் மையப்புள்ளியை கண்டறிந்து, 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சாதனை செய்துள்ளான். இளைஞனின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025