விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.
மாஸ்டர் படத்தின் ட்ரைலரை பார்த்த அனைவரும் வேற லெவலில் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஹிந்தியில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை B4U Broadcasting நிறுவனம் வாங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…