சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது ஐ.சி.சி ஆண்கள் டெஸ்ட் பிளேயர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய கேப்டன் விராட் கோலி தனது முதல் இடத்தை இழந்துள்ளார். புதிய தரவரிசைப்படி, நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 900 புள்ளிகளுடன் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் தான் விராட் கோலி 870 புள்ளிகளுடன் உள்ளார்.
புஜாரா 10 வது இடத்திலிருந்து எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 3-வது டெஸ்ட் போட்டிகளில் ரிஷாப் பண்ட் 2 இன்னிங்ஸில் 36 , 97 ரன்களை எடுத்ததால் 26 -வது இடத்தை பிடித்த்துள்ளார்.
Kane Williamson retains the top spot!
⬆️ Steve Smith takes second place
⬆️ Henry Nicholls leaps into the top 10Here’s the latest update in the @MRFWorldwide ICC Test Rankings ☝️#ICCRANKINGS pic.twitter.com/nliMxZQQGK
— ICC (@ICC) January 12, 2021