காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மற்ற நாடுகளின் உதவியை நாடும் எந்த பலனும் இல்லாமல் போனது. இதனால் தொடர்ந்து தனது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்துக்கு எதிரே பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தால் இந்திய தூதரகத்தின் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தூதரக அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக லண்டன் மேயர் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதே போல ஒரு மாதத்திற்கு முன்னரும் இந்திய தூதரகத்துக்கு எதிரே பாகிஸ்தான் கொடியை ஏற்றி பாகிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…