கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் இறந்தனர்.
இந்த தாக்குதலால் ஈரானுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையே போா் ஏற்படும் அபாயம் உள்ளது.நேற்று காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.மேலும் இறுதி ஊர்வலத்தில் ஈரான் கொடியையும் ,காசிம் சுலைமானி புகைப்படம் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்களையும் பொதுமக்கள் வசித்தபடி சென்றனர்.
காசிம் சுலைமானின் இறுதி ஊர்வலத்தை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. அப்போது பேசிய மூத்த அதிகாரி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஈரானில் மொத்தமாக ஒவ்வொருவரும் 1 அமெரிக்க டாலர் வழங்கி உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…