இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.!

நேற்று வெள்ளை மாளிகையில் இஸ்ரேலும், இரண்டு அரபு நாடுகளும் தங்கள் உறவுகளை சீராக்க அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த அமைதி விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
இந்த விழாவிற்கு ஜனாதிபதி டிரம்ப் தலைமை தாங்கினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை இந்த ஒப்பந்தத்திற்கு ஆபிரகாம் ஒப்பந்தங்கள் என்று பெயரிட்டது. மேலும், மூன்று தலைவர்களும் டிரம்புடன் கூட்டு அறிவிப்பில் கையெழுத்திட்டனர்.