மணிமேகலை சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
மணிமேகலை ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய (Bmw) வகையை சேர்ந்த காரை வாங்கி தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய கார் வாங்கினாலும் பழைய காரை மறவாத மணிமேகலை அந்த காரில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது கணவர் ஹுசைனுடன் வெளியே சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக இருவரும் சென்ற சென்ற கார் லாரி மீது உரசி விபத்துக்குள்ளாகியுள்ளது. நூலிழையில் மணிமேகலையும் ஹுசைனும் உயிர்தப்பியுள்ளனர்.
இது குறித்து மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவால் ” 2021 யார் மூஞ்சில முழிச்சேனே தெரியல… 2021ம் ஆண்டு எப்போ முடியும் என்று இருக்கு கால்ல சுடுதண்ணீர் கொட்டுச்சு, இப்போ கார் ஆக்சிடேன்ட் ஆகி இருக்கு, சும்மா கார் ஓட்டுலேமேனு எடுத்தேன் அது ஒரு குத்தமா… நல்ல வேளை பெரிய ஆக்சிடேன்ட் இல்லை, சின்னதா போச்சு… இந்த ஆண்டு முடியும் போது நான் வெடி வெடித்து கொண்டாடுவேன் ஏன் கூறியுள்ளார்”.
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…