தனுஷ் நடிப்பை பார்த்து அசந்து போயிட்டேன் என்று நடிகை ரஜிஷா விஜயன் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கான டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் ரஜிஷாவிஜயன் சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். அவர் திறமைக்கு அவ்வளவு அமைதியாக இருப்பது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது வரம்.
தனுஷிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. கர்ணன் படத்தில் மூன்று பக்கங்கள் வசனத்தை பேச வேண்டியிருந்தது. எப்படி பேசி எப்படி நடிக்க போகிறார் என்று பார்த்தேன் அவர் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டார். உடனே எல்லாரும் கை தட்டினார்கள். நான் மட்டும் அவர் நடிப்பை பார்த்து அசந்து போயிட்டேன்’ என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…