நடிகை கஜோல் தமிழ் சினிமாவில் மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அஜய் தேவ்கண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கருசிதைவு குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், 2001-ம் ஆண்டு, ‘கபி குஷி கபி கம்‘ பட காலகட்டம். அப்போதுதான் எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. படம் நன்றாக வந்திருந்தாலும் எனக்கு அது மகிழ்ச்சியான தருணமாக அமையவில்லை. அடுத்து இன்னொரு முறையும் எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. முந்தைய அனுபவத்தைவிட இம்முறை அதிகம் சிரமப்பட்டேன். தாங்கமுடியாத வலி. ஆனாலும் மீண்டு வந்தேன்.
கருச்சிதைவுக்கு ஆளானவர்களை, நம் நாட்டில் ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களை தனிமைப்படுத்துகிறார்கள். குடும்பத்தினரே அசிங்கப்படுத்தி அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள் என்றும், இது மிகவும் தவறு. கருச்சிதைவு பற்றி குடும்பத்தினர் உரையாட வேண்டும். கருச்சிதைவு என்பது எல்லோருக்கும் இயல்பாக நேர்கின்ற ஒன்றுதான். இதற்காக பெண்கள்மீது குற்றவுணர்வைச் சுமத்தாதீர்கள்’என்றும் மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…