நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் நாளை கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பதை குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை இன்று காலை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழக அரசு வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. இதனால் கர்ணன் திரைப்படம் வெளியாகுமா இல்லையா என்ற குழப்பம் எழுந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இந்த ட்வீட்டில் ” சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிட ப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் ” என்று பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரியில் நடிகர் தனுஷின் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…