இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட பைக்கான 2021 கேடிஎம் டியுக் 125 இந்தியாவில் அறிமுகமானது. அதன் விபரங்கள் குறித்து காணலாம்.
இளைஞர்கள் மத்தியில் ஸ்போர்ட்ஸ் பைக் வாங்குவது என்பது பலரின் கனவாகவே இருக்கின்றது. குறிப்பாக, பல மிடில் க்ளாஸ் பசங்களுக்கு அது கனவாகவே இருந்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள், தங்களின் மிட்-ரேஞ்ச் பைக்குகளில் அதிகளவில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். இதன்காரணமாக கேடிஎம் நிறுவனம் தனது டியுக் 125-ஐ அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தற்பொழுது அதன் BS-6 மாடலான 2021 கேடிஎம் டியுக் 125-ஐ அறிமுகப்படுத்தியது.
இதன் டிசைன், கேடிஎம் 1290 சூப்பர் டியூக் R பைக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டியூக் 200-ஐ போலவே அதே எல்.இ.டி. லைட், 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொலைதூர பயணத்திற்கு இது சிறந்த பைக்காக அமையும். முன்புறத்தில் WP யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் WP மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டமை பொருத்தளவில், முன்புறத்தில் 300 mm டிஸ்க்கும், பின்புறத்தில் 230 mm டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் வருகிறது.
இதன் என்ஜினை பொறுத்தளவில், லிக்யூடு கூல்டு 125 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 9,250rpm-ல் 14.5 PS பவரும், 8,000rpm-ல் 12 NM டார்க் வெளிப்படுத்தப்படும். இந்த என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் வசதி உள்ளது. இதனை இயக்க 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது, எண்டரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சிறந்ததை விளங்குகிறது.
இதன் விலையை பொறுத்தளவில், BS-4 மாடலை விட ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட்டு இந்திய சந்தையில் ரூ.1,50,010 (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலைக்கு அறிமுகமாகியுள்ளது. இது, எலக்ட்ரானிக் ஆரஞ்ச் மற்றும் செராமிக் வெள்ளை என இரண்டு நிறங்களில் வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…