140 பாம்புகளுக்கு மத்தியில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

அமெரிக்காவில் உள்ள இண்டியானாவில் ஆக்ஸ்போர்ட் பகுதியில் லாரா ஹாஸ்ட என்கிற பெண்மணி வசித்து வந்தார். இவர் தனது வீட்டில் பாம்புகளை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
இவர் வீட்டில் சுமார் 140 பாம்புகள் இருந்துள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட பாம்புகளை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ்காரர்களுக்கு அதிர்ச்சியான காட்சி காத்திருந்தது. அதாவது அவர் செல்லமாக வளர்த்த பாம்புகளில் ஒன்று அவரது கழுத்தை நெரிக்கும்படி சுற்றியிருந்தது. இதனால் வளர்த்த பாம்புகளே அவரை கொன்று விட்டதா, இல்லை, வேறு எதுவும் நடந்ததா என கண்டறிய அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் லாரா எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025