நடிகர் எஸ்ஜே சூர்யாவிற்கு விஜய் நடு இரவில் கால் செய்து பாராட்டிய நெகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார்.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது நடிகர் விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவலை எஸ்ஜே சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
எஸ்ஜே சூர்யா கூறியதாவது ,நான் ஸ்பைடர் மேன் படப்பிடிப்பில் இருக்கும் போது இரவு 11 மணிக்கு விஜய் பேசுறேன் என்று கூறி ஒரு போன் கால் வந்தது.நான் யாரு என்று கேட்டேன் , ஏனெனில் ஏற்கனவே என்னிடம் விஜய் சார் நம்பர் இருந்தது .இது புது நம்பர் ஆனாதால நான் நம்பவில்லை என்றும் ,அடுத்து பேசுவதற்கு முன்பு மொபைல் ஆஃப் ஆயிடுச்சு.மீண்டும் கால் வந்து பேசிய போது அண்ணா நான் விஜய் என்று கூறி விட்டு இப்போது தான் நெஞ்சம் மறப்பதில்லை டிரெய்லர் பார்த்தேன் .ஒரு மனுஷன் எவ்வளவு தான் கஷ்டப்படுவான்னு நீங்க பேசுற வசனம் கேட்டுட்டு வீட்டில் விழுந்து விழுந்து சிரித்தேன் என்று கூறினார்.பின் நடிகர் எஸ்ஜே சூர்யாவிடம் விஜய் அவருக்கு பெரிய ரசிகர் என்று சொல்லுங்கள் என்றும் கூறினார் .அது எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது என்று எஸ்ஜே சூர்யா நடிகர் விஜய் பாராட்டிய நெகிழ்ச்சியான தருணம் குறித்து கூறியுள்ளார்.
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…
சென்னை : கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை…
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…