மீண்டும் சினிமாவுக்கு வந்த இழப்பு.! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தனுஷ் பட நடிகர்.! காரணம் இதுதான்.!

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் . மாடலிங்கான இவர் ஒரு சில வெப் தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் படப்பிடிப்பு செல்வதாக கூறி கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து கிளம்பிய ஸ்ரீவத்சவ் அதன் பின் வீடு திரும்பவில்லை .இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் தேடிய போது அவர் படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறி சென்ற அன்று ஷூட்டிங் இல்லை என்பது தெரிய வந்தது . அதன் பின் அவரது குடும்பத்தினர் ஸ்ரீவத்சவ்வை தேடிய போது அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டிலிருந்து தூக்கில் தொங்கியப்படி பிணமாக மீட்கப்பட்டார் .
அந்த வீடு அவரது தந்தை பிசினஸிற்காக பயன்படுத்தி வந்ததாம் . மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது கடந்த சில மாதங்களாக ஸ்ரீவத்சவ் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனுடன் இல்லாதது இருப்பதுபோலத்தோன்றும் ‘Hallucination’ என்ற பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . கடந்த 3-ம் தேதி தூக்கிட்டு தொங்கிய அவரை 4-ம் தேதி சடலமாக மீட்டு நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது.சினிமாவில் பெரிய நடிகராக வலம் வர வேண்டிய ஸ்ரீவத்சவ் சிறு வயதிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025