கீர்த்தி சுரேஷ் தவறவிட்ட இடத்தை சட்டென பிடித்துக்கொண்ட பருத்திவீரன் நாயகி!

- கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த ஹிந்தி மொழி திரைப்படம் மைதான்.
- இந்த படத்தில் கீர்த்தி நடிக்க முடியாமல் போக, அந்த இடத்தை ப்ரியாமணி பிடித்துக்கொண்டார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது 168வது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் பாலிவுட்டில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாக உள்ள மைதான் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் இருந்து அவர் விளக்கியுள்ளார். தற்போது அவர் ஏற்று நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பருத்திவீரன் நாயகி பிரியாமணி நடிக்க உள்ளாராம்.
கீர்த்தி விலக்கியதற்கு தலைவரின் 168வது திரைப்படம் தான் காரணம் என்றும், அஜய் தேவ்கன் மனைவியாக நடிக்க இருந்த கீர்த்திக்கு வயதான தோற்றம் சரியாக பொருந்தவில்லை எனவும் கூறப்படுகிறது. மைதான் திரைப்படத்தை அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வரும் போனிகபூர் தான் தயாரிக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025