எனது அப்பா குடிகாரர் மற்றும் பல பெண்களுடன் தொடர்பில் உள்ளவர் என்றும், எனது அம்மா பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் மகன் கூறியுள்ளார்.
இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து செய்யா மலையே தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக கூறி புகார் செய்திருந்தார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, பீட்டர் பவுலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதனால் அவரை இருமுறை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாகவும் தெரிவித்திருந்தார் மேலும் சில வருடங்களாக பீட்டர் பவுல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறியிருந்தார் இதனை வனிதா மறுத்து அவர் குடிக்காரர் இல்லை என்றும், அவர் திருமணத்தில் கூட ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்று கூறி வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது பீட்டர் பவுலின் மகன் ஒரு சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, என் அப்பாவுக்கு குடிப்பழக்கம் இல்லை என்று வனிதா கூறியது முற்றிலும் பொய் என்றும், அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போது, அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார் என்றும், அப்போது காயம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் எனக்கும், இன்னொரு பெண்ணிற்கும் தொடர்பு இருக்கிறது என்றும், அவர்களது வயற்றில் தனது குழந்தை வளருவதாகவும் எனது அம்மாவிடம் கூறிய பின்னர் தான் அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார் என்றார். என் அப்பாவிற்கும், வனிதாவிற்கும் திருமணம் என்று கேட்ட போது எனக்கு எதுவும் தோன்ற வில்லை. ஏனெனில் அவர் வேலை செய்யும் ஒவ்வொரு இடத்திலும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார். அவரை தான் வெறுப்பதாக கூறிய பீட்டர் பவுலின் மகன், எனது அம்மா பணம் கேட்டு மிரட்டியதாக கூறியது பொய் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…