வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட்.!

வலிமை திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமாகுரோஷி நடித்துள்ளார். வில்லனாக கார்திகேயா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, புகழ், சுஜித்ரா, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ரஷ்யாவின் மாஸ்கோவில் தொடங்கிய படப்பிடிப்பில் சண்டைக்காட்சி மற்றும் இறுதிக்காட்சிகளை எடுத்துள்ளனர். இந்த நிலையில், வலிமை படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதையொட்டி படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு மும்மரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.
அந்த வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், வலிமை இரண்டாம் பாடல் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025