அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட 500 பேர்! சங்கிலியால் கட்டிபோட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் கொடுமை!

நைஜீரியா நாட்டில் ஒரு கட்டிடத்தில் சுமார் 500 பேர் அடிமைகளாக அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு வந்துள்ளனர். அவர்களை தற்போது அந்நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.
அதாவது குர்ரான் சொல்லித் தருவதாக கூறி, அதற்கு தனி பள்ளிக்கூடம் இருக்கிறது அங்கே கூட்டி செல்கிறேன் என்று கூறி நைஜீரிய நாட்டில் உள்ள காடுனா எனும் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு அந்த கட்டிடத்தின் அடைத்துவைத்து சங்கிலியால் கட்டி பட்டினி போட்டுள்ளனர். அதில் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளனர். இதனை அதிகாரிகள் கண்டறிந்து அந்த இடத்திற்கு விரைந்து அடிமைகளாக இருந்த 500 பேரையும் மீட்டனர்.
அதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பலர் உள்ளனர். மேலும், குர்ரான் சொல்லி தருவதாக கூறிய பள்ளி அங்கு இருந்ததற்கான அடையாளம் அங்கு இல்லை. இது மனிதர்களை அடிமைப்படுத்தும் கொடுமையான செயல் என மீட்டெடுத்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025