சுவீடன்: குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு-20 பேருக்கு பலத்த காயம்..!

சுவீடன் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சுவீடனின் தென்மேற்கு நகரமான கோதன்பெர்க்கில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 முதல் 25 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நகரத்தின் மையப்பகுதியில் இன்று காலை 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும், இதனால் பல கட்டிடங்களில் தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து 100 முதல் 200 பேர் வரை வெளியேற்றபட்டுள்ளனர். இந்த விபத்தில் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025